முகப்பு
உலகம்

இந்தியா வருகிறார் டிரம்ப்! வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வரவிருப்பது பற்றி...

Updated On : 27 ஜூன் 2026, 6:56 pm IST
ஜி 7 மாநாட்டில் டிரம்ப்புடன் மோடி - AP
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வரவிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாகவும் எரிபொருள், பாதுகாப்பு, தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய இறக்குமதி பொருள்கள் மீது 50% வரி விதித்தது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து முதல்முறையாக டொனால்ட் டிரம்ப் இந்தியா வரவுள்ளார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக செர்ஜியோ கோர் பேசுகையில், அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகளை இறுதி செய்ய அவர் இந்தியா வந்ததாகக் கூறினார். இந்தியாவுடனான உறவைப் பேண அமெரிக்கா முக்கியத்துவம் அளிப்பதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி இடையேயான தனிப்பட்ட நல்லுறவே இரு நாடுகளின் கூட்டாண்மைக்குத் தொடர்ந்து வலு சேர்ப்பதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் இருதரப்பு செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் இடையே, டிரம்ப்பும் மோடியும் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு, அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் சந்திப்பு நடத்தியதாகவும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாகவும் கூறிய கோர், பிற முடிவுகள் பற்றிய அறிவிப்பு சில வாரங்களில் வெளியாகும் என்றார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை ஆவணப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கோர் தெரிவித்தார்.

எரிசக்தி துறையைப் பொறுத்தவரை அமெரிக்கா, இந்தியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு சாத்தியமான ஏற்பாடு உருவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய கோர், கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். மேலும், அதுசார்ந்த விநியோகத்தை அதிகரிக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல, ஹோர்முஸ் நீரிணையில் காரணமாக உலகளவில் எரிபொருள் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்துவதன் அவசியம் பற்றியும், அதில் இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

summary

Sergio Cor has confirmed that Trump is set to visit India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments