சென்னை

மாநகராட்சியில் 1.7 லட்சம் எல்இடி விளக்குகள் பொருத்தம்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1.7 லட்சம் எல்இடி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 
சென்னை மாநகராட்சிப் பகுதியில் மின்சாரத்தை சேமிக்கும் எல்.இ.டி., பல்புகள் பொருத்தும் பணி கடந்த 2016 -இல் தொடங்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 77 ஆயிரம் உயர்கோபுரங்கள் மற்றும் தெருவிளக்குகளில் எல்.இ.டி. பல்புகள் பொருத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தற்போது, 1.7 லட்சம் தெரு விளக்குகளில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்பட்டு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 18 கோடி செலவு தவிர்க்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, 'மாநகராட்சிப் பகுதியில் இதுவரை 1.7 லட்சம் தெரு விளக்குகளில், எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 85 ஆயிரம் தெரு விளக்குகளும், 22 ஆயிரம் பூங்கா விளக்குகளிலும் எல்.இ.டி. விளக்குகள் விரைவில் பொருத்தப்பட உள்ளன' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT