சென்னை

மோட்டார் சைக்கிள் பந்தயம்: சிறுவன் உள்பட 7 பேர் கைது

DIN


சென்னையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வியாழக்கிழமை ஒரு கும்பல் ஈடுபட்டது. பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், அங்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொன்ராஜ் பாண்டியன் என்பவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பொன்ராஜ் பாண்டியன், அவரது 9 வயது மகள், தாயார் ஆனந்தி (69) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து கிண்டி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் அங்கு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டது, சோழவரம் கோ.அருண் (23), ஏழுகிணறு அம்மன் கோயில் தெரு அ.ஹரி (24), சூளைபள்ளத்தைச் சேர்ந்த ம.மோசஸ் (20), வியாசர்பாடி க.சுரேஷ் (22), நெசப்பாக்கம் ப.கார்த்திக் (25), சோழவரம் கோ.தினேஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 7 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அனைவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, 4 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அருண் மீது கொள்ளை, திருட்டு, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
புழல், மெரீனா கடற்கரை, அடையாறு, கிண்டி பகுதிகளில் பல ஆண்டுகளாக இளைஞர்களை ஒருங்கிணைத்து மோட்டார் சைக்கிள் பந்தயத்தை அவர்கள் நடத்தி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT