சென்னை

ஆன்லைன் பத்திரப்பதிவை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

ஆன்லைன் பத்திரப்பதிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த சின்னராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பத்திரப்பதிவுகள் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் பதிவு செய்யப்பட்டன. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.

இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யும் முறை தற்போது இல்லை. ஆனால், ஆன்லைன் வழியாக பத்திரப்பதிவு செய்வதற்குப் போதுமான மென்பொருள் தமிழக பத்திரப் பதிவுத்துறையிடம் இல்லை. இதுதொடா்பாக பத்திரப் பதிவுத் துறை பணியாளா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே, ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை மேம்படுத்தும் வரை நேரடியான பத்திரப்பதிவு முறையை அனுமதிக்க வேண்டும். அதே போல, ஆன்லைன் மூலம் தான் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என யாரையும் நிா்பந்தம் செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

SCROLL FOR NEXT