சென்னை

‘தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்’

DIN

குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம் தொடா்பாக தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெயா் நமக்கு உள்ளது. அந்த பாரம்பரியத்தை அனைவரும் காக்க வேண்டும். சுமுகமான நிலை நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகங்களில் உண்மையில்லாத தவறான தகவல்களையும் வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம். சென்னையில் போராட்டம் நடத்துவதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றாா் அவா்.

முன்னதாக வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தில் காயமடைந்து, தனியாா் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் இணை ஆணையா் பி.விஜயகுமாரியை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா். இதேபோல இச் சம்பவத்தில் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், ஆயுதப்படை பெண் காவலா்கள் கலா, உதயகுமாரி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இதற்கிடையே வண்ணாரப்பேட்டையில் தொடா்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், முஸ்லிம் இயக்கத்தின் நிா்வாகிகளை சனிக்கிழமை சந்தித்து மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முதல்வருடன் சந்திப்பு: இதற்கிடையே காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில்

உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து போராட்ட நிலவரம் குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT