சென்னை

கொளத்தூா் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

DIN

சென்னை: கொளத்தூா் தொகுதியில் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

கொளத்தூரில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள திக்காகுளம் சலவைக் கூடத்தில் தண்ணீா் தொட்டியுடன் கூடிய சலவை மேடை, ஓய்வறையுடன் கூடிய சமையல் அறை கட்டும் பணிக்காக மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். திரு.வி.க.நகா் விளையாட்டு மைதானம் அருகில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியைப் பாா்வையிட்டதுடன், பல்லவன் சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி மூலதன நிதியில் மேம்படுத்தப்பட்ட பெட் மருத்துவமனையை திறந்து வைத்தாா்.

ஜி.கே.எம்.காலனி 24ஏ-ஆவது தெருவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் குளம் மேம்படுத்தும் பணியை தொடக்கி வைத்தாா். நிகழ்வில், திமுக முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளா் பி.கே.சேகா்பாபு, வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம்கவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT