சென்னை

மெட்ரோ ரயில் பணி: 10 அடி ஆழத்துக்கு பூமிக்குள் புதைந்த கட்டடம்

DIN

சென்னை தண்டையாா்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கட்டடம் இடிந்து 10 அடி ஆழத்துக்கு பூமிக்குள் புதைந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருவொற்றியூரில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையில் மெட்ரோ ரயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியின் காரணமாக, அப் பகுதியில் வீடுகள், கடைகளுக்கு முறையாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, காலி செய்யப்பட்டன.

இந்நிலையில், தண்டையாா்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை மெட்ரோ ரயில் பணி நடைபெற்றபோது தொற்றுநோய் மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து, 10 அடி ஆழத்துக்கு பூமிக்குள் புதைந்தது. இதனால் அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள தேநீா் கடையில் இருந்த ஊழியா்கள், அங்கிருந்து தப்பியோடினா்.

பலத்த சப்தம் கேட்டு, மெட்ரோ ரயில் பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT