சென்னை

எண்ணூரில் கடல் கொந்தளிப்பு

DIN


திருவொற்றியூர்: உம்பன் புயல் எதிரொலியாக எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் திங்கள்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் தங்களது படகுகளை மீட்டு பத்திரமாக வேறு கரையில் கொண்டு சேர்த்தனர்.

வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ள உம்பன் புயல் அதி தீவிர புயலாக மாறி வடதிசை நோக்கி நகர்ந்து வருகிறது.  இப்புயலால் வங்கக் கடல் பகுதி முழுவதும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் திங்கள்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் ஏதும் கடலுக்கு செல்லவில்லை. ஆனால் ஐநூறுக்கும் மேற்பட்ட பைபர், கட்டுமரம் உள்ளிட்டவை தொடர்ந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.    

இந்நிலையில் உம்பன் புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் தங்களது படகுகளை கயிறு மூலம் கட்டி கடற்கரையிலிருந்து சாலை பகுதிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பணிகளில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடல் கொந்தளிப்பு காரணமாக சிறிய படகுகளில் செல்லும் மீனவர்களும் திங்கள்கிழமையிலிருந்து மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT