சென்னை

வானதி சீனிவாசனுக்கு வரவேற்பு

DIN


சென்னை: சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதன் முறையாக சென்னை வந்தார். அலுவலகத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-

 கட்சித் தலைமை எனக்கு  மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளது. பாஜகவில் மகளிர் அணி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மகளிருக்கு 33 சதவீதத்தை வழங்கி அதனைப் பின்பற்றக் கூடிய ஒரே கட்சி பாஜகதான்.    ஜனநாயகத்தில் வாக்காளர்களாக இருக்கக் கூடிய பெண்களை, அரசியல் ரீதியாக பங்கெடுக்கச் செய்ய எனது செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள இருக்கிறேன் என்றார் அவர்.

பாஜக மகளிர் அணி தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் திங்கள்கிழமை சென்னை திரும்பிய  பிறகு கட்சி அலுவலகமான கமலாலயத்தில்  உள்ள பாரத மாதா சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார் வானதி சீனிவாசன். உடன்  மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT