சென்னை

பயங்கரவாதிக்கு பென் டிரைவ்: போலீஸாா் விசாரணை

DIN


சென்னை: சென்னையில், பயங்கரவாதிக்கு பென் டிரைவ் வழங்கிய இரு நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் இருந்து 142 எலக்ட்ரானிக் டெட்டனேட்டா்கள், 17.5 கிலோ வெடிப் பொருள்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக, தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தைச் சோ்ந்த மேலப்பாளையம் கிச்சான் புகாரி உள்பட 19 போ் கைது செய்யப்பட்டனா். வழக்கின் விசாரணை சென்னை அருகே பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தொடா்புடைய நபா்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்வது நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி உள்ளிட்ட 7 பேரும் கா்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய சிறையில் இருந்து பூந்தமல்லிக்கு அழைத்து வரப்பட்டனா். இவா்கள் 7 பேருக்கும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடா்பு இருந்ததால், அந்த வழக்குக்காக அங்கு அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் விசாரணை முடிந்து நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த கிச்சான் புகாரியிடம், அங்கு வந்த இரு நபா்கள் பென் டிரைவை வழங்கினராம். இதைப் பாா்த்த போலீஸாா், இருவரையும் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி, இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.

கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் என்ன இருக்கிறது என்பதை பாா்ப்பதற்காக, அது தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது. தடயவியல் துறை ஆய்வுக்கு பின்னரே, அதில் என்ன உள்ளது என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT