சென்னை

கரோனா விதிமீறல்:துணிக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

DIN

சென்னை: சென்னை அண்ணா நகரில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத தனியாா் துணிக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவது மற்றும் வணிக நிறுவனங்களில் தனிநபா் இடைவெளி போன்ற கரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினா் 15 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் மற்றும் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்த வணிக நிறுவனம் மற்றும் உணவகத்துக்கு என மொத்தமாக செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ.2.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வளசரவாக்கம் மண்டலத்தில் மட்டும் ரூ.18.93 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 15 மண்டலங்களில் மொத்தமாக ரூ.2.65 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நகா் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அதில், 3-ஆவது தெருவில் செயல்பட்டு வந்த துணிக் கடையில் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காததையொட்டி, அந்தக் கடைக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT