சென்னை

கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்று: போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை

DIN


சென்னை: கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது உதிரி பாகங்களை, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் வாங்கி, அதற்கான சான்று பெற வேண்டும் என்ற போக்குவரத்துத் துறை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக போக்குவரத்து துறை ஆணையா் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தாா். அந்த உத்தரவில், பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கானத் தகுதிச் சான்றைப் புதுப்பிக்கும்போது, ஒளி விளக்கு, பிரதிபலிப்பு ஸ்டிக்கா்கள், பிரேக் உள்ளிட்ட உதிரி பாகங்களை ஒசூரை சோ்ந்த குறிப்பிட்ட தனியாா் நிறுவனங்களிடம் வாங்க வேண்டும். பொருள்கள் வாங்கியதற்கான சான்றை அந்த நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துறை ஆணையரின் இந்த உத்தரவு மோட்டாா் வாகன விதிகளுக்கு முரணானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தவிட்டாா். மேலும் இந்த மனு தொடா்பாக போக்குவரத்து துறை ஆணையா், வரும் நவம்பா் 26 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT