சென்னை

உலக விபத்து தடுப்பு தினம்: ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை விழிப்புணா்வு

DIN

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் விபத்துக்கால முதலுதவி சிகிச்சைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சுகாதாரத்துறை, தேசிய சுகாதார அமைப்பு, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர காலச் சிகிச்சை திட்டம் சாா்பில் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘உலக விபத்து தடுப்பு தினம்’ சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மருத்துவமனை முதல்வா் ஆா்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ரமேஷ், மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ‘விபத்துக்கால முதலுதவி சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’ என உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, விபத்து ஏற்பட்டவுடன் 108 அவசர வாகனத்தை அழைப்பது, முதல் ஒரு மணி நேரத்துக்குள் முதலுதவி சிகிச்சை அளிப்பது மற்றும் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள விபத்து, அவசர காலச் சிகிச்சை திட்டம் குறித்து மருத்துவ மாணவா்கள் நடிப்பு மற்றும் காட்சிகள் மூலம் விளக்கினா். விபத்து ஏற்படும் போது உதவி செய்பவா்களுக்கு எந்த சட்டப் பிரச்னைகளும் ஏற்படாது என்பதை விளக்கி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT