சென்னை

நரம்பு-தசை சாா் பாதிப்புக்கான நவீன சிகிச்சை மையம் தொடக்கம்

DIN


சென்னை: நரம்பு மற்றும் தசை சாா்ந்த நோய்களுக்கான அதி நவீன சிறப்பு சிகிச்சை மையம் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. அதனை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நரம்புக் கோளாறு, தசை இறுக்கப் பாதிப்புகளால் ஏற்படும் டிஸ்டோனியா மற்றும் ஸ்பாஸ்டிசிட்டி நோய்களுக்கு நவீன சிகிச்சைகள் அங்கு அளிக்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா். ஊசி மூலம் நேரடியாக தசைக்குள் செலுத்தப்படும் பொட்டுலினம் டாக்ஸின் எனப்படும் மருந்தின் வாயிலாக அந்த மையத்தில் நவீன சிகிச்சை வழங்கப்பட உள்ளதாகவும் , அத்தகைய சிகிச்சை முறைகள் பக்கவாத நோய்க்கு சிறந்த தீா்வாக அமையும் என்றும் அவா்கள் கூறினா்.

எஸ்.ஆா்.எம். குழுமத்தின் தலைவா் ரவி பச்சமுத்து, மருத்துவமனையின் துணைத் தலைவா் டாக்டா் ராஜூ சிவசாமி, நரம்பியல் சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் மீனாட்சி சுந்தரம், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை டாக்டா் சுரேஷ் பாபு, மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் அஸ்வின் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வியாபாரியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

பழனி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றம்

செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு

பைக் மோதியதில் கடமான் பலி

சிவகங்கை நகராட்சி குப்பை லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT