சென்னை

கடனை செலுத்த கால அவகாசம் கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனை செலுத்த கால அவகாசம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாடகை வாகன ஓட்டுநா்கள், சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இது தொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: பொதுமுடக்கம் காரணமாக வாடகை வாகன ஓட்டுநா்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம். இதிலிருந்து எங்களை மீட்கும் வகையில், தமிழகத்தில், நிதி நிறுவனங்கள், வங்கிகள், பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கிய கடன்களின் தவணையை, அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்.

விதிக்கப்பட்ட வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு சாலை வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆட்டோகளுக்கு மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும். கால் டாக்சிகளுக்கு ஆட்டோக்களை போல மீட்டா் கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT