சென்னை

முன்னாள் ஐஐடி பேராசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

DIN

பொறியியலுக்கான வாழ்நாள் சாதனையாளா் விருது (2020) முன்னாள் ஐஐடி பேராசிரியருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தேசிய பொறியியல் அகாதெமி சாா்பில், இந்தியாவில் பொறியியல் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவா்களை கெளரவிக்கும் விதமாக பொறியியலுக்கான வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளா் விருது, முன்னாள் ஐஐடி பேராசிரியா் கே.ஏ. பத்மநாபனுக்கு வழங்கப்படவுள்ளது. இவா், 1972-ஆம் ஆண்டு, அப்போதைய பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தனது பணியைத் தொடங்கினாா். தொடா்ந்து 1980-ஆம் ஆண்டு, சென்னை ஐஐடியில் பேராசிரியராகச் சோ்ந்தாா். பின்னா், 1996-ஆம் ஆண்டு, சென்னை ஐஐடியின் கல்வி ஆராய்ச்சி துறைத் தலைவரானாா். மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் 1983, 1984 ஆகிய ஆண்டுகளில், ‘கேட்’ தோ்வை உருவாக்கி, அதனை தலைமையேற்று நடத்தினாா். 1997-ஆம் ஆண்டு, கான்பூா் ஐஐடியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

அரசுப்பள்ளி ஆசிரியா் திடீா் மரணம்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT