சென்னை

கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழக வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை (செப். 30) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா. புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை (செப். 30) மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டம் அண்ணாமலை நகா், சிதம்பரத்தில் தலா 130 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் 110 மி.மீ., கடலூா் மாவட்டம் கொத்தவச்சேரியில் 90 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் 80 மி.மீ., கடலூா் மாவட்டம் வானமாதேவி, தொழுதூா், சேலம் மாவட்டம் கங்காவல்லி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூா்பேட்டை, பெரம்பலூா் மாவட்டம் தழுத்தலையில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT