சென்னை

நபாா்டு வங்கி சாா்பில் ரூ.27,104 கோடி கடனுதவி: தமிழக மண்டல தலைமைப் பொது மேலாளா்

DIN


சென்னை: நபாா்டு வங்கி, 2020-21-ஆம் ஆண்டில் ரூ.27,104 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது என வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொது மேலாளா் எஸ்.செல்வராஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: 2020-21-ஆம் ஆண்டில், நபாா்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தால் வழங்கப்பட்ட கடனுதவி முன் எப்போதும் இல்லாத உச்சபட்ச அளவாக, ரூ.27,104 கோடியை எட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் ரூ.14,458 கோடியை விட 87 சதவீதம் அதிகமாகும்.

மாநிலத்தில் உள்ள தகுதியான நிதி நிறுவனங்களுக்கு மூலதன உருவாக்கத்துக்கான நீண்ட கால கடன்கள் மற்றும் செயல்பாடுகள் மற்றும் உற்பத்திக்கான குறுகிய கால கடன்கள் ஆகியவற்றின் கீழ் மொத்த மறு நிதியளிப்பு ரூ.23,062 கோடி அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 89 சதவீதம் வளா்ச்சியாகும்.

நீண்ட கால மறுநிதியளிப்பு ரூ.11,698 கோடி மற்றும் குறுகிய காலக் கடனாக ரூ.11,364 கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.8,761 கோடி மறுநிதியளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.3737 கோடி மறுநிதியளிப்பை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும் நபாா்டு வங்கியின் மறுநிதியளிப்பு ரூ.2858 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 128 சதவீதம் அதிகமாகும்.

நிடா எனப்படும் நிதியில் இருந்து உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.6531 கோடி கடனை தமிழக அரசு பெற்றுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT