சென்னை

பண மோசடி: பெண் கைது

DIN

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த அமுதா (39), பங்குச் சந்தையில் தான் கூறும் நிறுவன பங்குகளில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என பலரைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.

இதை நம்பி 23 போ், அமுதாவின் வங்கிக் கணக்குகளில் வெவ்வேறு தினங்களில் மொத்தம் ரூ.87 லட்சத்து 25,499 செலுத்தியுள்ளனா். ஆனால் அமுதா, அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல், அபகரித்துள்ளாா். இதற்கிடையே பணத்தை கொடுத்தவா்கள், தங்களுக்குரிய பங்கு முதலீட்டுக்கான லாபத்தை கேட்டுள்ளனா். அமுதா லாபத்தையும் முதலீட்டையும் கொடுக்கவில்லையாம்.்

சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அமுதாவைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT