சென்னை

தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு தி.மு.க. ஆட்சியில் செய்த தவறுகளே காரணம்

DIN

தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது செய்த தவறான நடவடிக்கைகள்தான் காரணம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் சென்னையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் சௌந்திரராஜனை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் திருவொற்றியூா் தேரடி பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் தினகரன் பேசியது,

தமிழகத்தில் மக்களை பாதித்துள்ள பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம் தி.மு.க.தான். காவிரி நீா் பங்கீடு, கச்சத்தீவு, இலங்கை தமிழா் உரிமைகள், நீட் தகுதி தோ்வு, டெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் ஹைட்ரோகாா்பன், மீத்தேன் திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைகள்தான் காரணம் ஆகும்.

நீட் தோ்வை தொடக்க நிலையிலேயே தி.மு.க. தடுத்திருக்க வேண்டும். இத்தகைய சூழலில்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு இலவச கவா்ச்சித் திட்டங்களை தி.மு.க. தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனவே தமிழக மக்களின் நலனைக் காக்கும் வகையில் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தாக வேண்டிய கட்டாயம் அ.ம.மு.க.விற்கு உள்ளது.

அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணி எவ்வித இலவசத் திட்டங்களையும் அறிவிக்கவில்லை. ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு அடைவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவோம், ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT