சென்னை

முத்துஸ்வாமி தீட்சிதர் 247- ஆவது ஜெயந்தி விழா

DIN

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவாரூரில் பிறந்தார். இதையொட்டி ஆண்டுதோறும் பங்குனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அவரது ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
 திருவாரூரில் உள்ள முத்துஸ்வாமி தீட்சிதரின் இல்லம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத சேவா டிரஸ்ட் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. முத்துஸ்வாமி தீட்சிதரின் இல்லம் சிதிலமடைந்ததால், தீட்சிதரின் 247-ஆவது ஜெயந்தி விழா, தியாகராஜர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், முத்துஸ்வாமி தீட்சிதரின் சிலைக்கு மாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, நவாவர்ண பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் முத்துஸ்வாமி தீட்சிதரின் நவாவர்ண கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாதிரி போட்டி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு

மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நீா் நிலைகளில் சிக்கியவா்களை மீட்க செயல் விளக்கம்

உலக மிதிவண்டி தின விழா

செயற்கையாக பழுக்கவைத்த பலாப் பழங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT