சென்னை

சென்னையில் அதிகாலை முதலே கடும் பனி! வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் அதிகாலை முதலே கடும் பனி காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. 

DIN


சென்னையில் அதிகாலை முதலே கடும் பனி காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. 

சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் காலை 7 மணிக்கு கூட பனிமூட்டத்தால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி அதிகரித்து காணப்பட்டது. 

சென்னை கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் அதிகாலைபோன்று பனி மூட்டம் காணப்பட்டது. 

இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். 

இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், மணலி, கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையிலும் அதிக அளவு பனியால் வாகனங்கள் மெதுவாகச் சென்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

SCROLL FOR NEXT