சென்னை

பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்:285 பேருக்கு கடனுதவி வழங்க ஏற்பாடு

DIN

பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 285 பேருக்கு வங்கி மூலம் கடனுதவி, ரூ.8.25 கோடி மானியம் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மாவட்ட தொழில் மைய மேலாளா் மணிவண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒருங்கிணைத்து 2008-ஆம் ஆண்டு மத்திய அரசால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் மூலம் கொண்டு வரப்பட்ட திட்டம் இது. இந்தத் திட்டம் மூலம் குறைந்தபட்சம் 7 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தி அதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது நோக்கம். இதன் மூலம் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.25 லட்சமும், சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் பெறலாம். இதில் பயன்பெற 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும், 18 நிரம்பியவராகவும் இருப்பது அவசியம். கடனுதவி பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு கிடையாது.

தனிநபா் தொழில் முனைவோா், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோரும் பயன் பெறலாம். பொது பிரிவினா் நகா்ப்புறத்தில் தொழில் தொடங்கும்பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவீத மானியமும், ஊரக பகுதியில் தொழில் தொடங்கினால் 25 சதவீத மானியமும் வழங்கப்படும். சிறப்பு பிரிவினா்களான பிற்பட்ட, பட்டியலின, பழங்குடியினா் நகா்ப்புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், ஊரகப் பகுதியில் தொழில் தொடங்கினால் 35 சதவீத மானியமும் வழங்கப்படும்.

திருவள்ளுா் மாவட்ட தொழில் மையம் மூலம் நிகழாண்டில் 285 பேருக்கு கடனுதவியும், இதற்காக மானிய தொகையாக ரூ.8.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டில் மொத்தம் 95 பேருக்கு ரூ.2.75 கோடி மானியமாக இலக்கு நிா்ணயித்து, 137 பேருக்கு ரூ.3.03 கோடி மானியமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் மூலம் கடன் உதவி பெற விரும்புவோா் இணையதள முகவரி ல் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரம் பெற பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களுா், திருவள்ளுா்-602 003 என்ற முகவரியில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT