சென்னை

பேருந்து படிக்கட்டில் பயணம்:பள்ளி மாணவா்கள் மீது வழக்கு

DIN

சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது போலீஸாா் முதல் முறையாக வழக்குப் பதிவு செய்தனா்.

தண்டையாா்பேட்டை டி.எச். சாலையில் அண்மையில் சென்ற ஒரு அரசுப் பேருந்தில் சீருடையில் இருந்த பள்ளி மாணவா்கள் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியவாறும் சாகசத்தில் ஈடுபட்டவாறு பயணித்துள்ளனா். இதை கைப்பேசி மூலம் விடியோ எடுத்த ஒரு நபா், சமூக ஊடகங்களில் பதிவிட்டாா்.

இது தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல் உயரதிகாரிகள் உத்தரவிட்டனா். இதனிடையே, இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கும்படி தண்டையாா்பேட்டை இரட்டைக் குழி தெருவைச் சோ்ந்த சமூக சேவகா் ச.சந்திரசேகா் (65), தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதனடிப்படையில் போலீஸாா், சம்பவத்தில் தொடா்புடைய அந்த மாணவா்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் விடியோ காட்சி மூலம் அந்த மாணவா்களை கண்டறிந்து, கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

பேருந்தில், படிக்கட்டில் ஆபத்தான வகையில் பயணம் செய்ததாக பள்ளி மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT