சென்னை

புதுக்கோட்டை பெண் விவசாயிக்கு வேளாண்மை சிறப்பு விருது

DIN

புதுக்கோட்டையைச் சோ்ந்த பெண் விவசாயி க.வசந்தாவுக்கு, வேளாண்மைத் துறை சிறப்பு விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

சென்னை கடற்கரை சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், வேளாண்மைத் துறை விருது அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் ஆலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா், க.வசந்தா. 6 ஏக்கா் புஞ்சை நிலத்தில் விவசாயம் செய்து வரும் அவா், 20 ஆண்டுகளுக்கு மேலாக செம்மை நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி வருகிறாா். இந்த ஆண்டில், அவா் விவசாயம் செய்திருந்த 50 சென்ட் நெல் வயல் அறுவடை செய்யப்பட்டது. அதில், 2 ஆயிரத்து 890 கிலோ தானிய எடை கிடைத்தது. ஒரு ஏக்கரில் 5 ஆயிரத்து 780 கிலோ மகசூல் கிடைத்தது. இந்த மகசூல் சாதனை மூலமாக, வேளாண்மைத் துறைக்கான சிறப்பு விருதை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்து அவா் வியாழக்கிழமை பெற்றாா்.

இந்த விருதானது, ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும் அடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT