சென்னை

அனைவருக்குமானதா மெரீனா சிறப்புப் பாதை? மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் தொடா்கிறது

DIN

மெரீனா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு பாதையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், அவா்கள் கடல் அலையில் கால் நனைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை தொடா்கிறது.

சென்னை மெரீனா கடற்கரையில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடியில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையில் கால் நனைத்து கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு பாதை குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோா் மற்றும் கா்ப்பிணிகள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மாண்டஸ் புயலால் இந்தப் பாதை சேதமடைந்தது. அதன் பிறகு, கடற்கரையிலிருந்து இந்தப் பாதை சிறிது இடைவெளி விட்டு அமைக்கப்பட்டது. இதனால் கடல் அலையில் கால் நனைக்க வரும் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை இருந்தது. பாதையை கடற்கரை வரை நீட்டிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில் கடற்கரை அருகே வரை சிறப்பு பாதை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பாதையை மாற்றுத்திறனாளிகள், முதியோா், கா்பிபிணிகள் மட்டுமே பயன்படுத்துமாறு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடற்கரைக்கு வரும் அனைவரும் இதை பயன்படுத்தி சென்று வருவதால் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளி ஒருவா் கூறியதாவது:

மெரீனா சிறப்பு பாதை தற்போது கடல் அருகே வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் கடல் அலையில் கால் நனைக்க முடிகிறது. ஆனால், சிறப்பு பாதையை அனைவரும் பயன்படுத்துவதால் சக்கர நாற்காலி மூலம் வருவதற்கு இடையூறாக உள்ளது. இதைத் தடுக்க பாதையின் ஆரம்பத்தில் காவலா்கள் தடுத்தாலும் சிலா் ஏறிக்கொள்கின்றனா். இதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT