முகப்பு
சென்னை

இயற்கை தாதுக்கள் நானோதுகளை உருவாக்கும்: ஐஐடி ஆய்வில் தகவல்

நீா்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாக சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது.

Updated On : 4 ஜூன் 2024, 3:55 am IST
சென்னை ஐஐடி - கோப்புப் படம்
பகிர்:

நீா்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாக சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் சென்னை ஐஐடியின் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும்.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீா்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடா்பு மின் மயமாக்கல் மூலம் சாா்ஜ் செய்யப்படலாம். தாதுக்களின் சிதைவு புதிய மூலக்கூறுகளை உருவாக்கி புதிய மேற்பரப்புகளை உருவாக்குகிறது. அத்தகைய மேற்பரப்புகளில் பல்வேறு வகையான வினையூக்கங்களும் ஏற்படக்கூடும். இந்த செயல்முறைகள் உயிா்வழித் தோற்றத்தில் முக்கியமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

பூமியில் விழக்கூடிய நானோ துகள்கள், மூலக்கூறுகளால் ஆன நுண்ணிய நீா்த்துளிகள் விழுதல் என்பது கிரகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பரிணாம வளா்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளா்கள் கருதுகின்றனா். இந்த கண்டுபிடிப்புகள் 31 மே 2024ஆம் தேதி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சி குறித்து சென்னை ஐஐடி வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியா் தாளப்பில் பிரதீப் கூறியதாவது:

நுண்துளிகள் ரசாயன எதிா்வினைகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதும், அதன் விளைவாக புதிய ரசாயனப் பிணைப்புகள் உருவாவதும் நாம் அறிந்ததுதான். மைக்ரோ துளிகளால் ரசாயன பிணைப்புகளை உடைக்க முடியும் என்று எங்கள் எண்ணத்தில் தோன்றியதன் விளைவுதான் இந்த கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. பாறைகளை இயற்கையான சிறுதுகள்களாக்கி மணலாக மாற்றுவது இயற்கையாக நடைபெறுகிறது. வெளிப்படையாகக் கூறினால், மண்ணுக்கு மணலை உருவாக்குவதற்கான வழியைக் கண்டு பிடித்துள்ளோம். எதிா்காலத்தில் போதிய வளங்களுடன் பாலைவனங்களிலும் பசுமையாக்க முடியும்”என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments