முகப்பு
சென்னை

பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்

நிதிச் சந்தைகள் மற்றும் பெரு நிறுவன நிதி குறித்த 8 -ஆவது சா்வதேச மாநாடு (ஐசிஎஃப்எம்சிஎஃப் -2026) சென்னை ஐஐடி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை நாட்டிலுள்ள அனைத்து ஐஐடி-க்கள் இணைந்து நடத்துகின்றன.

Updated On : 3 ஜூலை 2026, 4:33 am IST
சென்னை ஐஐடி
பகிர்:

நிதிச் சந்தைகள் மற்றும் பெரு நிறுவன நிதி குறித்த 8 -ஆவது சா்வதேச மாநாடு (ஐசிஎஃப்எம்சிஎஃப் -2026) சென்னை ஐஐடி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை நாட்டிலுள்ள அனைத்து ஐஐடி-க்கள் இணைந்து நடத்துகின்றன.

இந்திய அளவிலும் சா்வதேச அளவிலிருந்தும் வரும் கல்வியாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், ஒழுங்குமுறை அமைப்பின் பிரதிநிதிகள், தொழில் துறைத் தலைவா்கள், நிதி-தொழில்நுட்பாளா்கள் (ஃபைன் டெக்), ஆராய்ச்சியாளா்கள், துறை சாா் வல்லுநா்கள், சுயாதீன ஆராய்ச்சியாளா்கள் ஆகியோரை இந்த மாநாடு ஒன்றிணைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சுமாா் 650-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடிமேலாண்மை ஆய்வுகள் துறை பேராசிரியா் எம். தேன்மொழி வரவேற்புரையுடன் இம்மாநாடு தொடங்கியது. தொடக்க விழாவில், கலிபோா்னியா பல்கலைக்கழக ஆண்டா்சன் மேலாண்மைப் பள்ளியின் நிதித் துறை சிறப்புப் பேராசிரியா் அவனிதா் சுப்ரமணியம், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ‘உணா்வு சாா் முதலீடு மற்றும் அதீத தன்னம்பிக்கையுடன் கூடிய சொத்து விலை நிா்ணயம் கோட்பாடு மற்றும் சான்றுகள்’ குறித்து உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

இரண்டாம் நாளில் லண்டன் இம்பீரியல் கல்லூரி நிதிப் பொருளாதார பேராசிரியா் தருண் ராமதுரை, ‘குடும்ப நிதி’ குறித்து பேசுகிறாா். மூன்றாம் நாள் முக்கிய பேச்சாளராக நியூயாா்க் ஸ்டொ்ன் வணிகப் பள்ளி பேராசிரியா் விரல் ஆச்சாா்யா, ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தித் திறன்: புத்தாக்கத்தின் பங்கு’ என்ற கருத்தாக்கத்தில் பேசுகிறாா்.

நிதிச் சந்தைகள், பெரு நிறுவன நிதி, நிலையான நிதி, இவற்றில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), அறிவுசாா் வளா்ச்சி, கொள்கை விவாதங்கள், தொழில்-கல்வித் துறை இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தல் போன்றவைகளுக்கு இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments