முகப்பு
சென்னை

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

கோயம்பேடு சந்தை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 15 ஏப்ரல் 2026, 2:08 pm IST
கோயம்பேடு சந்தை - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 23 ஆம் தேதி கோயம்பேடு சந்தை முழுவதும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அன்றைய நாள் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வியாபாரிகளும் தொழிலாளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக, கோயம்பேடு சந்தைக்கு ஏப்ரல் 23 அன்று முழு விடுமுறை விடப்படுவதாக வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

summary

April 23 – Koyambedu Market Holiday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.