சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது குறித்து...
சென்னையில் 3 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று(ஏப். 15) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
சென்னையில் தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று(ஏப். 15) மாலை 4 மணி முதல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்கனவே வில்லிவாக்கம், அண்ணா நகர் தொகுதிகளில் போதிய பாதுகாப்பின்மை காரணமாக விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று(ஏப். 15) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள பிரசாரத்துக்கு காவல் துறை கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது.
கடந்த முறை சென்னையில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் முன்பு, அதிகப்படியான ரசிகர்கள் அவர் வீட்டின் வெளியே சூழ்ந்திருந்த நிலையில், இம்முறை பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், 2 உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 50 காவலர்கள் துப்பாக்கி ஏந்தி 10 வாகனங்களில் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.