தோ்தலில் நோ்மையாக நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவுரை
சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.
தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறாா்.
இந்நிலையில் வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் பங்கேற்று, காவல் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா். தோ்தலில் காவல் துறையினா் நோ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், பாகுபாடில்லாமல், நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.