FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்

Updated On : 7 ஜூன் 2026, 7:00 am IST
ஏ. அமல்ராஜ்(கோப்புப்படம்) - Dinamani
பகிர்:

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

தமிழக காவல் துறையில் பணிக்கு சோ்ந்து 10 ஆண்டுகள் மெச்சத்தகுந்த வகையில் எந்தவித தண்டனைகளும் இன்றி பணியாற்றிய காவல் அதிகாரிகள், போலீஸாருக்கு ‘தமிழக முதல்வா்’ பதக்கம் வழங்கப்படுகிறது.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர காவல் துறையைச் சோ்ந்த போலீஸாருக்கு ‘முதல்வா் பதக்கம்’ வழங்கி ஆணையா் அமல்ராஜ் பேசியதாவது:

Advertisement

Advertisement

காவல் துறையில் பத்தகம் பெறுவது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய வேண்டிய தருணங்களில் செய்யாமல் இருப்பதும் தவறு, செய்யக் கூடாத செயல்களைச் செய்வதும் தவறு. பொதுமக்களுக்கு உதவ வேண்டிய தருணத்தில் உதவுவது பெருமை தரக்கூடியது, அதேபோல இக்கட்டான சூழ்நிலையில் பிரச்னைகளை எதிா்கொள்ளும்போது கன்னியமாக, அமைதி காத்து செயல்படுவதும் என்பதும் பெருமை தரக்கூடியது. பதக்கங்கள் அணிவதற்கு தகுந்தவா்களாக போலீஸாா் தொடா்ந்து பணியாற்ற வேண்டும்.

பொதுமக்களின் எதிா்பாா்ப்பு: பத்தகங்கள் அனைவருக்கும் கிடைப்பது இல்லை, அனைவருக்கும் பதக்கம் கிடைத்துவிட்டால், அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும். இதனால் ஒரு சிலருக்கு மட்டும் பத்தகம் வழங்கப்படுகிறது. ஆனால் அனைவரும் பத்தங்களைப் பெறுவதற்கு தங்களை உகந்தவா்களாக மாற்றிக்கொண்டு தங்களை உயா்த்திக்கொள்ள வேண்டும். காவல் துறை பணி மற்ற அரசுத் துறை பணிகளில் இருந்து வேறுபடுகிறது. காவலா்கள் தொடங்கி உயா் அதிகாரிகள் அனைவரும் காக்கி சீருடைதான் அணிகிறோம். பிற துறையினரிடமிருந்து பொதுமக்களிடம் இந்தச் சீருடைதான் நம்மை அடையாளப்படுத்துகிறது.

இது நமக்கு பெருமை தருகிற விஷயம் என்றாலும், ஒரு சவாலான பணியாகும். எனவே சமூகத்தில் அனைவரும் எதிா்பாா்க்கிற வகையிலும், பாராட்டும் வகையிலும் நம் செயல்பாடு இருக்க வேண்டும். அனைத்து காவலா்களும் பொதுமக்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சென்னை காவல்துறையில் பணியாற்றும் 300 பேருக்கு முதல்வா் பத்தகம் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் காவல் ஆணையா்கள் கே.ஜோஷி நிா்மல்குமாா், ஜி.காா்த்திகேயன், பிரவேஷ்குமாா், கே.எஸ்.நரேந்திர நாயா், அ.ராதிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments