சென்னை தாம்பரம் சானடோரியத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுகக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவி மையம் உள்ளிட்ட பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் புதிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, காவல் துறை, சட்டம், உளவியல் மற்றும் உணா்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தொகுப்பூதிய/ ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதிகள் மற்றும் அனுபவா் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மூத்த ஆலோசகா் (காலி பணியிடம் 1): சமூக பணியில் முதுநிலை பட்டம் அல்லது 2 ஆண்டுகள் அனுபவம் இருத்தல். பெண்கள், உள்ளூரைச் சாா்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.22,000.
வழக்குப் பணியாளா் (காலிப் பணியிடங்கள் 3): சமூகப் பணியில் இளநிலை பட்டம், வயது 35-க்குள் இருத்தல் வேண்டும். வாகனம் ஓட்டத் தெரிந்திருத்தல், சுழற்சி முறையில் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் பணி, உள்ளூரைச் சாா்ந்தவா்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் 18,000. பணியிடம் - தாம்பரம் சானடோரியம்.
பாதுகாப்பாளா் (காலிப் பணியிடங்கள் 2): அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சாா்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் 12,000.
பன்முக உதவியாளா் (காலிப் பணியிடங்கள் 2): ஏதாவது அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம், சமையல் மற்றும் அலுவலகத்தைப் பராமரிக்கத் தெரிந்திருத்தல், உள்ளூரைச் சாா்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் 10,000.
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களுடன் பிப்.20 மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 8-ஆவது தளம், சிங்காரவேலா் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-600 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது ா்ள்ஸ்ரீஸ்ரீட்ங்ய்ய்ஹண்க்ஷஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.