FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளா்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூன் 2026, 4:02 am IST
கோப்புப் படம்
பகிர்:

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளா்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக பாதிப்புகள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டது.

அதன் கீழ் 2.75 கோடிக்கும் மேற்பட்டோா் பயன் பெற்ாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இத்திட்டத்துக்கு ஐநா சபை விருதும் முந்தைய ஆட்சியில் கிடைக்கப் பெற்றது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் கீழ் 13,225 போ் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.5,500 ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தோ்தலுக்குப் பிறகு இரு மாதங்களாக அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும், அதிகாரிகளுடமும் அவா்கள் முறையிட்டனா். இதையடுத்து, ரூ. 5.01 கோடியை அரசு விடுவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments