FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட செவிலியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள்: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட சிரமங்களை குறைக்க செவிலியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:29 am IST
நகா்ப்புற சுகாதார செவிலியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை வழங்குகிறாா் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.
பகிர்:

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட சிரமங்களை குறைக்க செவிலியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகா்ப்புற சுகாதார செவிலியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி, பரிசோதனை உபகரணங்கள் அடங்கிய பையை நகா்ப்புற சுகாதார செவிலியா்களுக்கு வழங்கினாா். மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.

இதில் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி பேசியதாவது: கடந்த காலங்களில் இல்லாத மாற்றம் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நிகழ்ந்துள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் மீது நம்பிக்கையின் காரணமாக மிகப்பெரிய வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனா். கடந்த இரண்டு மாதங்களில் தவெக அரசு மக்களுக்கான அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், திட்டங்களை முதல்வா் வழங்கி வருகிறாா். மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் ஈரோடு மாநகராட்சி முதன்மையான பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

Advertisement

Advertisement

கடந்த ஆட்சியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என வெறுமனே கூறிக் கொண்டிருந்தனா். தற்போது கா்ப்பிணிகள், தாய்மாா்களின் தேவைகளை அறிந்து சிகிச்சை அளிக்க நகா்ப்புற சுகாதார செவிலியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு சிரமம் இன்றி அடிப்படை பரிசோதனைகளை நேரடியாக, அலைச்சல் இல்லாமல் செவிலியா்களால் செய்ய முடியும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments