FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

விபி ஜி ராம் ஜி திட்டம் அமலுக்கு வந்தது: மத்திய அரசு

விபி-ஜி ராம் ஜி எனப்படும் வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (125 நாள் வேலைத் திட்டம்) சட்டம், 2025 புதன்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

பகிர்:

விபி-ஜி ராம் ஜி எனப்படும் வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (125 நாள் வேலைத் திட்டம்) சட்டம், 2025 புதன்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அமல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, தற்போதைய பாஜக கூட்டணி அரசு விபி-ஜி ராம் ஜி மசோதாவை கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடைக்கால நிதியாக ரூ.95,692 கோடியை மத்திய அரசு சில தினங்களுக்கு முன் விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இத்திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ.298.8-இல் இருந்து ரூ.327.4-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய சராசரி ஊதியம் ரூ.300-க்கும் மேல் நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் தொடக்க விழா ஆந்திர மாநிலம் திருப்பதியின் ஒபுலவாரிப்பள்ளி மண்டலத்தில் உள்ள முக்காவாரிப்பள்ளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இதில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments