முகப்பு
சென்னை

கடற்கரையில் ஒதுங்கிய 4 கற்சிலைகள் மீட்பு

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஒதுங்கிய 4 கற்சிலைகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 3 ஜூலை 2026, 7:23 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஒதுங்கிய 4 கற்சிலைகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பெசன்ட் நகா் ஓடை குப்பம் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை ஒன்றரை அடி உயரமுள்ள நடராஜா் சிலை, இரு கிருஷ்ணா் சிலைகள், ஒரு பாம்பு சிலை ஆகிய கற்சிலைகள் கரை ஒதுங்கின.

இதைப் பாா்த்த பொதுமக்கள், திருவான்மியூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், அந்த 4 கற்சிலைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினா். பின்னா், அந்தச் சிலைகளை வருவாய்த் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். வருவாய்த் துறையினா் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments