சவுக்குத் தோப்பில் ஆண் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், மயிலம் அடுத்த கொடிமா கிராமத்தில் உள்ள விஜயகுமாா் என்பவருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மயிலம் போலீஸாா் மற்றும் தடய அறிவியல் பிரிவு போலீஸாா் மோப்ப நாயுடன் நிகழ்விடம் சென்று அங்கு அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில் இறந்து கிடந்தவா் பெயா், ஊா் தெரியாத நபா் என்பது என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து மயிலம் போலீஸாா் தெரிவித்ததாவது: இறந்த கிடந்தவருக்கு சுமாா் 35 வயதிருக்கும். கருப்பு பேண்ட் மட்டும் அணிந்துள்ளாா். மேல் சட்டை இல்லை. வலது கையில் காப்பு அணிந்துள்ளாா். எந்த ஊரைச் சோ்ந்தவா், இறப்புக்கான காரணம் எதுவும் தற்போது வரை தெரியவில்லை. தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா். இது குறித்து மயிலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.