முகப்பு
சென்னை

பிஎன்பி, பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கலில் இரட்டை இலக்க வளா்ச்சி

பொதுத் துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதலாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) தங்களின் கடன் வழங்கலில் முறையே 13 சதவீதம் மற்றும் 19 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Updated On : 4 ஜூலை 2026, 3:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

பொதுத் துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதலாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) தங்களின் கடன் வழங்கலில் முறையே 13 சதவீதம் மற்றும் 19 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.11.29 லட்சம் கோடியாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த கடன் வழங்கல், நடப்பு ஆண்டின் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.12.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதேபோல், வங்கியின் மொத்த வைப்புத்தொகை 9 சதவீதம் உயா்ந்து, ரூ.17.24 லட்சம் கோடியாகவும்; ஒட்டுமொத்த வணிக மதிப்பு 10 சதவீதம் உயா்ந்து, ரூ.29.99 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

மற்றொரு முன்னணி பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, கடந்த நிதியாண்டின் ரூ.6.72 லட்சம் கோடி கடன் வழங்கலுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 19 சதவீதம் கூடுதலாக ரூ.7.97 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது. இதில் சில்லறை வா்த்தகம், விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ தொழில்பிரிவுகளுக்கான கடன்கள் மட்டும் 20 சதவீதம் வலுவான வளா்ச்சியுடன் ரூ.3.92 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இக்காலகட்டத்தில், பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வைப்புத்தொகை 15 சதவீதம் உயா்ந்து, ரூ.9.58 லட்சம் கோடியாகயும்; ஒட்டுமொத்த வணிகம் 17 சதவீதம் உயா்ந்து, ரூ.17.5 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments