முகப்பு
வணிகம்

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வங்கிக்கு அபராதம் விதிப்பு!

நாடு முழுவதும் வங்கிகள் விதிமுறைகளை மீறினால், ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து வருகிறது.

Updated On : 3 ஜூலை 2026, 7:30 pm IST
இந்திய ரிசர்வ் வங்கி - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: நாடு முழுவதும் வங்கிகள் விதிமுறைகளை மீறினால், ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து வருகிறது.

இந்தநிலையில், நடைமுறை விதிமுறை மற்றும் வாடிக்கையாளரை அறிதல் ஆகிய விதிமுறைகளின் சில அம்சங்களைப் பின்பற்றாததற்காக, பேங்க் ஆஃப் பரோடா மீது ரூ. 63.6 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

அதேபோல், கே.ஒய்.சி. வழிகாட்டுதல்களின் சில விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் மீதும் ரூ. 3.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், நிதி நிலையை அடிப்படையாகக் கொண்டு பேங்க் ஆஃப் பரோடாவின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் சட்டப்பூர்வ ஆய்வு நடத்தப்பட்டது. பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா-வில் சில கடன் கணக்குகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வட்டி விகிதத்தை விட அதிக வட்டி வசூலித்திருப்பது பரிசீலினையில் கண்டறியப்பட்டது. குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி. விவரங்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 'மத்திய கே.ஒய்.சி. பதிவேட்டில்' பதிவேற்றம் செய்யத் தவறியதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

மற்றொரு அறிக்கையில், வாடிக்கையாளர் கணக்குகளை குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது அவ்வப்போது மறுஆய்வு செய்வதற்கான நடைமுறையை வங்கி செயல்படுத்தத் தவறியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதனையடுத்து மார்ச் 2025 வரையிலான நிதி நிலையை அடிப்படையாகக் கொண்டு ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மீது தேசிய வீட்டுவசதி வங்கி சட்டப்பூர்வ ஆய்வு நடத்தி அபராதம் விதிக்கப்பட்டது.

summary

The Reserve Bank of India said it has imposed a penalty on Bank of Baroda and GIC Housing Finance Ltd.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments