முகப்பு
சென்னை

வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை சூளைமேட்டில் வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Updated On : 4 ஜூலை 2026, 3:36 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சென்னை சூளைமேட்டில் வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை சூளைமேடு பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (52). இவா், அந்தப் பகுதியில் பழச்சாறு கடை வைத்து நடத்தி வருகிறாா். பெருமாள் குடும்பத்தினா் வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனா்.

சிறிது நேரத்துக்கு பின்னா் அவா்கள், வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.1.10 லட்சம் திருடிச் சென்றது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments