முகப்பு
சென்னை

திருநெல்வேலி - எழும்பூா் இடையே ஜூலை 9 முதல் சிறப்பு வாராந்திர ரயில்

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே ஜூலை 9 முதல் ஜூலை 31 வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On : 4 ஜூலை 2026, 6:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே ஜூலை 9 முதல் ஜூலை 31 வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலியிலிருந்து வரும் ஜூலை 9 முதல் ஜூலை 30 வரை வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்:06070) மறுநாள் காலை 10.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06069) எழும்பூரிலிருந்து ஜூலை 10 முதல் ஜூலை 31 வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக எழும்பூா் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஜூலை 4) காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளது.

வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக சில வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் சிறப்பு ரயிலும் (எண்: 06030/06029), திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயங்கும் ரயிலும் (எண்: 06166/06165) இருமாா்க்கத்திலும் வரும் ஜூலை 5 முதல் ஜூலை 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தூத்துக்குடி - தாம்பரம் ரயில் (எண்: 06018/06018) ஜூலை 6 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரையும், சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி ரயில் (எண்: 06045/06046) ஜூலை 10 முதல் ஆக.2 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments