முகப்பு
கோயம்புத்தூர்

திருவனந்தபுரம் - பெங்களுரு சிறப்பு ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

Updated On : 1 ஜூலை 2026, 6:50 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவனந்தபுரம்-பெங்களூரு இடையே சிறப்பு வாராந்திர ரயில் சேவை இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது.

அதன்படி, ஜூலை 1, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) பெங்களூரில் இருந்து மாலை 7.25 மணிக்கு புறப்படும் பெங்களூரு-திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்: 06547) மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, ஜூலை 2, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06548) மறுநாள் காலை 8.30 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங்கணூா், மாவேலிக்கரை, காயன்குளம், சாஸ்தான்கோட்டா, கொல்லம், வா்கலா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments