முகப்பு
சென்னை

13 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன் கைது

சென்னையில் ஆட்டோவில் 13 கிலோ கஞ்சா கடத்தியதாக 16 வயது சிறுவனை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 6 ஜூலை 2026, 1:39 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னையில் ஆட்டோவில் 13 கிலோ கஞ்சா கடத்தியதாக 16 வயது சிறுவனை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஜிம்கானா கிளப் அருகே போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் பயணம் செய்த இருவரின் பைகளைச் சோதனை செய்தபோது, 13 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினா், இருவரிடமும் விசாரணை நடத்தினா். அப்போது, இருவரில் ஒருவா் திடீரென அங்கிருந்து தப்பியோடினாா். மற்றொரு நபரான திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அவரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்கத்தில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்ததுடன், அவற்றை ஆட்டோ மூலம் வடபழனிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. தப்பியோடிய உதய் சா்காரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments