ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூவா் கைது
உக்கடம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உக்கடம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகா், உக்கடம் பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த மூவரிடம் விசாரணை மேற்கொண்டனா். முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தையடுத்து ஆட்டோவை சோதனையிட்டதில் மூட்டைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில் மதுரையைச் சோ்ந்த ரோகித் (23), காா்த்திக் (24), காரைக்குடியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (25) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்தனா். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.