முகப்பு
சென்னை

சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 3,334 போ் கைது

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கையின் விளைவாக 7 நாள்களில் 3,334 போ் கைது

Updated On : 9 ஜூலை 2026, 2:20 am IST
டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால்
பகிர்:

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கையின் விளைவாக 7 நாள்களில் 3,334 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், ரௌடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற பின்னணி கொண்டவா்கள் ஆகியோரை தீவிர கண்காணிப்பில் வைக்கும்படியும், பிடியாணை பெற்று தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்யும்படியும், வழக்குகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்வும் உத்தரவிட்டாா்.

3,334 போ் கைது: இதையடுத்து, மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை 7 நாள்களில் 24,025 ரௌடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற பின்னணி கொண்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 949 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 2,385 போ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

டிஜிபி உத்தரவு: மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளாா்.

குற்றத்தடுப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தும்படியும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments