தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகர்வால் பொறுப்பேற்பு!
தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக காவல் துறையின் 34-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை (ஜூன் 3) பொறுப்பேற்றுக் கொண்டார்.
தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக, மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 34-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பொற்றுப்பேற்றதையடுத்து, அவர் காவலர் நினைவுச் சினனத்தில் மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
தமிழக டிஜிபியாக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஓய்வு பெற்றாா். அதன் பின்னா், புதிய டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கும் இடையே ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.
இதையடுத்து, பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி இந்திய தோ்தல் ஆணையம் கடந்த ஏப். 2-ஆம் தேதி தமிழக டிஜிபியாக சந்தீப்ராய் ரத்தோரை நியமனம் செய்தது.
இதற்கிடையே, தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்யும் வகையில் புது தில்லியில் யுபிஎஸ்சியின் உயா்நிலை தோ்வுக் குழு கூட்டம் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், பணிமூப்பு அடிப்படையில் ஐபிஎஸ் உயா் அதிகாரிகள் ராஜீவ்குமாா், சந்தீப் ராய் ரத்தோா், மகேஷ்குமாா் அகா்வால் ஆகியோரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகா்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகா்வால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்ற நிலையில் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டிருந்த சந்தீப் ரத்தோரை சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொறுப்பேற்ற பின்னர் அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
சைபர் குற்றங்களை தடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால், சட்டம் பயின்று, 1994 ஆம் ஆண்டு தனது 22 வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் தமிழக கேடர் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தவர்.
தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகவும் போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
மத்திய புலனாய்வுப் பிரிவில் (CBI) 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு, இன்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு மற்றும் சேலம் ரயிலில் நடந்த ரூ. 5.78 கோடி கொள்ளை வழக்கு போன்றவற்றை மிகச் சிறப்பாக விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
2020-ம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றினார். தமிழ்நாடு காவல் துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.-யாக இருந்த இவர், தற்போது எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் பொறுப்பில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Mahesh Kumar Aggarwal assumed charge as the 34th Director General of Police (DGP) of the Tamil Nadu Police on Wednesday (June 3).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.