FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கூடுதலாக 3,000 விஏஓக்களை நியமிக்க அமைச்சர் செங்கோட்டையனிடம் கோரிக்கை

தமிழகத்தில் கூடுதலாக 3,000 கிராம நிா்வாக அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்று அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனை சந்தித்து விஏஓ சங்கத்தினா் வலியுறுத்தினா்.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் கூடுதலாக 3,000 கிராம நிா்வாக அலுவலா்களை (விஏஓ) நியமிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனை சந்தித்து விஏஓ சங்கத்தினா் வலியுறுத்தினா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் செங்கோட்டையனை சந்தித்து 7 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் அருள்ராஜ் அளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக விஏஓக்களுக்கு ஒரு வழி மாவட்ட மாறுதல் கோரிக்கை வலியுறுத்தினோம். தற்போது 182 விஏஓக்களுக்கு வெளிப்படையான பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் 17,000 கிராமங்களில் 12,500 விஏஓ-க்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். பெரிய கிராமங்களில் ஒரு விஏஓ மட்டுமே பணியாற்றுவதால், கூடுதலாக 2,000 முதல் 3,000 புதிய விஏஓ பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

கிராமங்களில் பணியாற்றும் விஏஓக்களின் அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments