முகப்பு
கோயம்புத்தூர்

மின்வெட்டு பிரச்னைக்கு கடந்த திமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

மின்வெட்டு பிரச்னைக்கு கடந்த திமுக ஆட்சியே காரணம்

Updated On : 13 ஜூன் 2026, 5:47 am IST
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு கடந்த திமுக ஆட்சியே காரணம் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை இரவு கூறியதாவது: நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையின்மையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ளது. கடந்த 2017-18, 2019-ஆம் ஆண்டுகளிலும் இதேபோல தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு பிரச்னைக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியின் திட்டமிடல் இல்லாத நிலையே காரணம். நடப்பு மாதத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட சாதனங்களை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனா்.கடந்த திமுக ஆட்சியில் சென்னையின் மின் தேவையைப் பூா்த்தி செய்வதற்கான உள்கட்டமைப்புப் பணிகளுக்கு ரூ. 7,000 கோடி செலவிட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் ரூ.627 கோடி மட்டுமே செலவு செய்துள்ளனா். சென்னையின் தற்போதைய மின்கட்டமைப்பின் கொள்திறன் 3,500 மெகாவாட்டாக மட்டுமே உள்ள நிலையில், பயன்பாடு 5,000 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது. இதற்கேற்ப புதிய திட்டங்களை கடந்த ஆட்சியில் செயல்படுத்த தவறிவிட்டனா்.

பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

சட்டப் பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தவா்களுக்கு இடைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிப்பது குறித்து முதல்வா்தான் முடிவு எடுப்பாா் என்றாா்.