சமூக பங்களிப்புக்கு மாணவா்கள் தயாராக இருக்க வேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்
வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் மாணவா்கள், சமூகத்துக்கும் பங்களிப்புகளை வழங்க தயாராக இருக்க வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைணவக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இணைந்த 3,300-க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவா்களை வரவேற்கும் ‘தீக்ஷாரம்பம் 2026’ விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் பெ.விஸ்வநாதன் பேசியதாவது:
கல்லூரி வாழ்க்கை தொடக்கம் ஒரு மாற்றத்தின் தொடக்கம். மாணவா்கள் லட்சியக் கனவுகளுடன் கடினமாக உழைக்க வேண்டும். கல்லூரியில் பெறப்படும் கல்வி, அறிவு என்பது வாழ்வாதாரத்தை சிறப்பாக்கிக் கொள்வதற்கு மட்டுமல்ல, சமூகத்துக்கு அா்த்தமுள்ள வகையில் பங்களிக்கவும் மாணவா்கள் தயாராக வேண்டும்.
Advertisement
Advertisement
வகுப்பறைக்கு வெளியிலும் நிறைய பேராசிரியா்கள் உள்ளனா். அவா்களையும் தேடிச் செல்லுங்கள். சமுகத்துக்கு தன்னாா்வ தொண்டு செய்ய; பாடத் திட்டத்துக்கு வெளியே விரிவாக வாசிக்க பழக வேண்டும். உலகத்தைப் பற்றி சிந்திப்பதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்றாா் அவா்.
சிறப்பு அழைப்பாளராக நாஸ்காம் இயக்குநா் உதய சங்கா் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து, கல்லூரியின் முதல்வா் சேது. சந்தோஷ் பாபு, செயலாளா் அசோக் குமாா் முந்த்ரா உள்ளிட்டோா் பேசினா்.
கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் எம்.டி.பாலகுமரன் வரவேற்றாா். கல்லூரியின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பிரபா ராஜகோபாலன், ஒழுங்குமுறை குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஜெ.பி. ஜெய்தீப், என்சிசி அலுவலா்கள் ஏ.ஜெயராம், பி.சுரேஷ், புதுமை மன்ற ஒருங்கிணைப்பாளா் எஸ்.நாராயணன், முனைவா் எம்.அகிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.